Digiqole ad

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.

டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும் பன்மொழி த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல்  நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.

படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ஒரு ஆர்வத்தை உருவாக்கிய அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர். மாதவனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் நிஷப்தத்தின் டிரெய்லரை வெளியிட்டது. சைலன்ஸ் என்ற தலைப்பில், தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகும் இந்த படம் மைக்கேல் மேட்சனின் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகரின் உணர்ச்சிமிக்க பார்வையை வெளிப்படுத்தும்  படத்தின் புதிய போஸ்டரையும் ஸ்ட்ரீமிங் சேவையானது வெளியிட்டது, இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல்  அமேசான் ப்ரைமில் படத்தை ஸ்டிரீம் செய்யலாம்.

டிரெய்லரை இங்கே பாருங்கள்: https://www.youtube.com/watch?v=Gun6uT6buDc&feature=youtu.be

foceditor