இந்தியா இலங்கை பங்கேற்கும் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

இந்தியா இலங்கை நாடுகளைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் பங்கேற்கும் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் கடந்த 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொண்ட வீரர்கள் 8 தங்கம், 15 வெள்ளி, மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 30 பதக்கங்களை வென்றனர். மேலும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகம் முதல் இடத்தை பிடித்தது.
இந்தோ இலங்கை கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் பெற்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று இந்த அணியின் பயிற்சியாளர் நாகமணி மற்றும் போட்டியில் பங்கேற்று திரும்பிய வீரர்கள் அனைவரும் தமிழ முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
பதக்கம் வென்றுவந்த தமிழக அணி வீரர்களை வாழ்த்திய தமிழக முதல்வர், அவர்கள் மென்மேலும் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை குவிக்க, தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்களும் உடன் இருந்தனர்.