இளையராஜாவாக வாழப் போகும் தனுஷ்

 இளையராஜாவாக வாழப் போகும் தனுஷ்

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் தனுஷ். இப்படத்திற்கு இளையராஜா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார். படத்தின் அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கமல்ஹாசன், கங்கை அமரன், வெற்றிமாறன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுபவர் நடிகர் தனுஷ். இப்படத்திலும் இளையராஜாவாக வாழப்போகும் தனுஷை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

 

Related post