கடசீல பிரியாணி : Movie Review

 கடசீல பிரியாணி : Movie Review

கடசீல பிரியாணி : திரைப்படம் விமர்சனம்
தமிழில் வித்தியாசமான முயற்சியில் திரைப்படங்கள் வருவது அரிது,அதிலும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வருவது அரிது.அது போல் வித்தியாசமான திரைக்கதையுடன் வந்திருக்கும் படம் தான் இந்த கடைசில பிரியாணி. தனது அப்பாவின் மரணத்திற்கு பழிவாங்க முயற்சிக்கும் இரு மகன்கள் மற்றும் அதில் துளியும் விருப்பம் இல்லாத கடைசி மகன். அவரை ஏமாற்றி கேரளாவில் இருக்கும் ஒரு தொழிலதிபரை கொலை செய்ய கிளம்பும் மகன்கள், அந்த தொழிலதிபரின் சைகோ மகனிடம் மாட்டி தவிக்கும் இளைய மகன் என்று படம் வேறு தளத்தில் பயணித்து திரைக்கதையை சுவரசியபடுதுகிறது.

படத்தில் நடித்துள்ள அனைவரும் கிட்டத்தட்ட புதுமுகங்கள் தான் என்றாலும் அத்தனை பேரின் நடிப்பும் மிக பிரமாதமாக உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி ஒரு காட்சியே வந்தாலும் படத்தின் திருப்புமுனை காட்சியில் வந்து செல்கிறார். படத்தில் லாரி டிரைவராக வரும் ஹக்கீம் ஷா கவனம் ஈர்கிறார்,தனது குடும்பத்தை காப்பாற்ற இவர் செய்யும் வேலைகள் பதைக்க வெய்க்கிறது. படத்தின் திரைக்கதையை சர்வதேச அளவில் இருக்கும் வகையில் அமைத்துள்ளார் இயக்குனர் நிஷாந்த் களிடிண்டி. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஒலிகளவை மிக அருமையாக இருந்து படத்தை உயர்த்தி பிடிக்கிறது. படத்தின் முக்கிய காட்சிகளில் பல கெட்ட வார்த்தைகள் இருக்கிறது என்பதால் குடும்பத்துடன் பார்க்க முடியாது,இருந்தாலும் படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்பதால் நிச்சயம் சென்று பார்க்கலாம்.

Related post