கட்டம் சொல்லுது Movie Review

கட்டம் சொல்லுது தற்போதுள்ள காலசூழலில் அத்தியாவசியமான பார்க்கப்படும் ஜாதகம் , ஜோசியம் போன்றவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் விளையாடுகிறது, அப்படி ஜாதகம் ஜோசியம் பார்ப்பது அவசியம் தானா என்ற கேள்விகளோடு பதில் சொல்கிறது திரைப்படம். படத்தின் கதை வந்திய தேவன் என்ற இளைஞரின் வாழ்க்கை மையமாக கொண்டு நகர்கிறது, வேலையில்லாமல் திருமணமும் ஆகாமல் வயது ஏறி கொண்டிருக்கிறது, அவரது தந்தையே ‘இவனுக்குளம் யார் பொண்ணு தருவா’என்று ஏளனமாக பேசுகிறார். நண்பர்களுடன் சுற்றும் அவரை ஒருபெண் காதலிக்கிறார் அந்த பெண்ணின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க , இருவரின் ஜாதக பொருத்தமும் கூடிவர மிகப்பெரிய சிக்கல் ஒன்று ஏற்படுகிறது. அது என்ன சிக்கல், அவருக்கு என்ன ஆனது என்ற கேள்விக்கு நகைச்சுவை கலந்த பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் sg எழிலன், தன்னால் இயக்கி நன்றாக நடிக்கவும் தெரியும் என்று நிரூபிக்கிறார். படத்தின் சில காட்சிகளில் ரசிகர்களை சிரிக்கவும் வைக்கிறார்.படித்து விட்டு வேலை இல்லாமல் அப்பாவிடம் அடி வாங்கி கொண்டு, திருமணம் நிச்சயம் ஆகும் போது அப்பாவை எதிர்த்து கேள்வி கேட்கும் இடங்களும் ரசிக்க வைக்கிறார். படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் புதுமுகம் தான் என்றாலும் அப்படியொரு நேர்த்தியாக நடித்துள்ளனர் அனைவரும், குறிப்பாக நாயகனின் அம்மாவாக வரும் சகுந்தலா. டாக்டர் படத்தின் மூலம் புகழ்பெற்ற தீபா சங்கர் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு ஒரு சிறிய படத்தை முடிந்த அளவுக்கு பெரிய படமாக காட்ட முயற்சித்து இருக்கிறார்கள்.அவர்களது முயற்சிக்கு பாராட்டுகள். முடிந்த வரை காமெடி கலந்து தான் சொல்ல வந்த கதையை புரியும்படி நகர்த்தி செல்கிறார் புதுமுக இயக்குனர் நடிகர் sg எழிலன்.
கட்டம் சொல்லுது : வெற்றி பெறுகிறார்கள்.
Cast
Deepa Shankar – Sakthikani
S.G.Ezhilan – Vanthiyadevan
T.Thidiyan – Uthravathi
Su.Chinnadurai – Buddhi Sigamani
Sagundala – Vanthiyadevan Mother
Raja Ayyapan – Kutty
J. Sabarish – Gopi
Manivasagan – Vettukili (Venkatraman)
Veeramani
V. Rani Jeya – Visalatchi