கமலி நடுக்காவேரி திரைப்படம் விமர்சனம்

கமலி நடுக்காவேரி : கயல் ஆனந்தி திருமணத்திற்கு பின் வெளிவந்திருக்கும் அவரது முதல் திரைப்படம் இந்த கமலி நடுக்காவேரி. படத்தின் மைய கதாபாத்திரம் கமலியாகவே இதில் நடித்துள்ளார் ஆனந்தி. படிப்பில் ஆர்வம் இல்லாமல் தனது ஊரில் படித்து கொண்டிருக்கிறார ஆனந்தி, மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர் மீது ஆனந்திக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் அவர் ஐஐடி கல்லூரியில் சேர்ந்தது போன்று தானும் அங்கு சென்று படிக்கச் வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. இதற்காக ஊரில் நன்கு படித்த வாத்தியார் பிரதாப் போத்தனிடம் பயிற்சிக்கு செல்கிறார். அவரின் பயிற்சியால் நன்கு படித்து ஐஐடியில் சேரும் அளவிற்கு மதிப்பெண் வாங்குகிறார். பின் அந்த மாணவருக்காக அந்த கல்லூரியில் சேர்ந்த ஆனந்தி என்ன ஆனார் என்பது மீதி கதை.
கயல் ஆனந்தி இனி கமலி ஆனந்தி என்று அழைக்கலாம் போல அந்த அளவுக்கு நேர்த்தியான நடிப்பு கச்சிதமாக கதாபாத்திரத்தில் பொருந்தி போகிறார். பல இடங்களில் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார்.பிரதாப் போத்தன் கமலியின் ஆசிரியராக வருகிறார்.அவர் பயிற்சி அளிக்கும் விதம் அழகான காட்சிகளை வடிவமைக்கப்பட்டுள்ளது.இமான் அண்ணாச்சி மற்றும் அழகம் பெருமாள் கதையின் ஓட்டத்துக்கு உதவுகிறார்கள். படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு குறிப்பிடும் படி உள்ளது. இயக்குனர் ராஜசேகர் துரைசாமி ஒரு சிறந்த படத்தை உருவாக்கியுள்ளார் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு படம் பார்க்கும் அனைவருக்கும் ஊக்கத்தை அளிக்கக்கூடிய படமாக இந்த கமலி நடுக்காவேரி நிச்சயம் இருக்கும்.
கமலி நடுக்காவேரி : தரம்