ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

 ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு பலரது பாராட்டை பெற்றார். தற்போது ராஜாக்கூரில் வளர்க்கும் “கரூப்பன்” என்ற காளையுடன் இருக்கும் படங்களை “ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா!!” என்ற வாசகத்துடன் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

“கருப்பன் காளை இது வரை 40க்கும் மேற்ப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர்கள் இது வரையில் கருப்பன் காளையை எவரும் பிடித்ததில்லை, ஏன் தொட்டதுகூட இல்லை. பங்கெற்ற அனைத்து போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளது எங்கள் “கருப்பன்”.

வென்ற பரிசுகளை எங்கள் கருப்பன் காளையை பராமரிப்பவர்களுக்கும், ஊர் மக்கள் வீட்டில் எதேனும் காதுகுத்து அல்லது திருமண விழா போன்ற விசேஷங்கள் நடக்கையில் அவர்களுக்கும் கருப்பன் காளை சார்பாக அளித்து விடுவோம். தற்போது எங்கள் கருப்பன் காளையை எனது தம்பி வினோத் பரமாரித்து வருகிறார்” என்றார் நடிகர் சூரி

Spread the love

Related post

You cannot copy content of this page