ஜெய் பீம் – திரைப்படம் விமர்சனம்

Jai bhim : சூர்யா தயாரித்து நடித்திருக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லும் ஆழமான பதிவு இந்த ஜெய் பீம். படத்தின் நாயகனாக மணிகண்டன் தனது மனைவி லிஜோ மோல் ஜோஸ் ஊரின் ஒடுக்கப்பட்ட மக்களாக மலை வாழ் மக்களாக வாழ்கிறார்கள். மணிகண்டன் பாம்புகளை பிடிக்கும் தொழில் செய்து வருகிறார், ஒரு முறை ஊரின் பெரிய தலைகட்டின் வீட்டில் ஒரு பாம்பு நுழைய அதை பிடிக்க செல்கிறார் மணிகண்டன் அங்கு நகைகள் வைத்த பெட்டி காணாமல் போகிறது. அடுத்த நாள் மணிகண்டனை வந்து கைது செய்து கொண்டு செல்கிறது போலீஸ். பல்வேறு கொடுமைகளை சந்திக்கிறார் அவர் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும். நியாத்துக்காக போராடும் வக்கீல் சூர்யா பொது நல வழக்கு தொடுத்து பல அப்பாவிகளை போலீசிடம் இருந்து காப்பாற்றுகிறார். அவரிடம் தனது கணவரை போலீசிடம் இருந்து மீட்டு தரும் படி கெஞ்சுகிறார் லிஜோ. சூர்யா இந்த வழக்கை கையில் எடுக்கிறார். பின்பு மணிகண்டனுக்கு என்ன ஆனது, அவரது குடும்பத்துக்கு நியாயம் கிடைத்ததா? போலீசின் அராஜகம் எந்த அளவுக்கு இருக்கும் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது ஜெய் பீம்.
இப்படி ஒரு படத்தை தயாரித்ததற்காகவே சூர்யாவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது,படத்தின் மைய பகுதியாக இருந்து சாட்டை எடுத்து சுழட்டி அடிக்கிறார் சூர்யா. அனைவருக்கும் சமஉரிமை வேண்டும் என்பதிலும் அந்த உரிமை மீறல்கள் நடக்கும் இடத்தில் போராடும் காட்சிகளும் சூர்யாவை தூக்கி நிறுத்துகிறது.படத்தின் நாயகன் மணிகண்டன் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் பல இடங்களில் நம் கண்களில் கண்ணீர் வரவைத்து விடுகிறார். லிஜோ மோல் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கலங்க வைக்கிறார். பிரகாஷ் ராஜ் உண்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் எப்படி இருப்பார் என்பதை நம்முள் கடத்துகிறார். ரஜிஷா விஜயன் உட்பட அனைத்து காதபத்திரகளும் கதையோடு ஒன்றி பொருந்தி போகிறார்கள் . படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்திற்கு முழு பலம் சேர்கிறார்கள்.இயக்குனர் ஞானவேல் தனது முதல் படத்தையே சமூக அக்கறையுடன் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. போலீஸ் எப்படி பொய் வழக்கு பதிகிறார்கள்,ஒரு அனாதை பிணம் எப்படி கணக்கு கொள்ள படுகிறது, ஒரு பெண்ணை அவரின் பாவாடையை கழட்டி அவரை அடிக்கும் போலீஸ் போன்ற மனதை உருக்கும் காட்சிகளை படமாக்கி நம்மை தூங்க விடாமல் செய்கிறார் ஞானவேல்.
ஜெய் பீம் : தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் அல்ல பதிவு.