தங்கலான் படத்தால் தள்ளிச் செல்லும் கங்குவா!?
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் தங்கலான். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், தங்கலான் படத்தினை வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், கோடை விடுமுறைக்கு படத்தினை கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்களாம் படக்குழுவினர்.
சூர்யாவின் கங்குவா படத்தினையும் ஞானவேல் ராஜாவே தயாரித்து வருவதால், கங்குவா ரிலீஸ் அடுத்த வருட இறுதிக்கு சென்று விடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.