நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்
பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஆறு பாலா. தற்போது இவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஓல்ட் பேட்ரியோடிக் புரொடக்ஷன் (Old patriotic production) தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆறு பாலா
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடிக்கின்றார். உடன் மூணாறு ரமேஷ், ராம்ஸ், சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – ரமேஷ்
இசை – விக்ரம் வர்மா
படத்தொகுப்பு – பிரபா
கலை – மாய பாண்டி
மற்ற நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.