பூம் பூம் காளை – திரைப்படம் விமர்சனம்

 பூம் பூம் காளை – திரைப்படம் விமர்சனம்

பூம் பூம் காளை: அப்புகுட்டியின் நடிப்பில் குஷால்குமார் இயக்கத்தில் வந்திருக்கும் ஒரு அடல்ட் திரைப்படம் தான் இது. படத்தின் கதை புதியதாக கல்யாணம் ஆன தம்பதிகள் தேனிலவுக்கு செல்கிறார்கள், காதல் என்பது காமத்தை தாண்டியது என்று கூறும் மனைவி தாம்பத்தியத்தை சிறிது காலம் பழகி புரிந்துகொண்ட பின் வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். அனால் கல்யாணம் முடிந்தவுடன் அந்த விஷயம் தான் என்று பல கனவுகளோடு காத்திருக்கும் கணவன், இவர்களை சுற்றி நடக்கும் பலரின் கதைகள், இவ்வாறு பல கிளை கதைகளுடன் ஒரு முழுமையான படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் குஷால்குமார்.

படத்தின் நாயகன் அப்புக்குட்டி மூன்று பொண்டாட்டி காரராக படத்தில் அதகளம் செய்கிறார். அவருக்கு ஜோடியாக மூன்று மனைவிகள். படத்தில் கணவன் மனைவியாக வரும் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.படத்தில் நகைச்சுவை முக்கிய பங்கு வகிக்கிறது. படத்தின் ஒளிப்பதிவும்,இசையும் காட்சிகளை நகர்த்த உதவுகின்றது. முழுக்க முழுக்க இளைஞர்களை கவர வேண்டும் என்ற நோக்கில் ஒரு திரைப்படத்தை தந்திருக்கிறார் இயக்குனர். சில குறைகள் இருந்தாலும் பார்க்கலாம்.

Related post