பொன் மாணிக்கவேல் : Movie Review

 பொன் மாணிக்கவேல் : Movie Review

பொன் மாணிக்கவேல் : திரைப்படம் விமர்சனம்
பிரபு தேவா கிட்டத்தட்ட முதன்முறையாக போலீஸ் அதிகாரி ஆக நடித்து A.C. முகிலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த பொன் மாணிக்கவேல். படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு நீதிபதி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.அவரை தொடர்ந்து ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்ல படுகிறார். இதை விசாரிக்க நியமிக்க படும் போலீஸ் வேலையை வேண்டாம் என்று ராஜினாமா செய்த பிரபு தேவா போலீசுடன் இணைந்து இந்த கொலைகளை யார் செய்கிறார்கள் ? என்ன காரணம் என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த திரைப்படம்.படம் டிஸ்னி ஹாட்ஸ்டர் ott தளத்தில் வெளியாகி உள்ளது.

படத்தின் கதை பழக்கப்பட்ட கதை என்றாலும் அதில் நடித்திருக்கும் பிரபு தேவா போலீஸ் அதிகாரி வேடத்தில் புதிதாக தெரிகிறார்,ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் பொருந்தாத மாதிரி தெரிந்தாலும் தனது உடல் மொழியால் பிற்பாதியில் பொருத்தி காட்டுகிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் மறைந்த இயக்குனர் மகேந்திரன் நடித்துள்ளார்.சுரேஷ் மேனன் மற்றும் நிவேதா பெதிராஜ் ஆகியோர் படத்திற்கு பலம் சேர்கிறார்கள்.படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆங்காங்கே தனியாக இருக்கிறது கதையோடு ஒன்றியில்லை. படத்தின் ஒளிப்பதிவாளர் KG வெங்கடேஷ் வேலை அருமை. இயக்குனர் முகில் செல்லப்பன் கதையை நன்றாக வடிவமைத்து திரைக்கதையில் சற்று கோட்டை விட்டு இருக்கிறார். இன்னும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருந்தால் படம் அருமையாக வந்திருக்கும் .

Related post