மறைந்த பிரபலம் “VJ சித்ராவின் வெள்ளித்திரை கனவு” – விரைவில் வெளியாகும் “கால்ஸ்”

 மறைந்த பிரபலம் “VJ சித்ராவின் வெள்ளித்திரை கனவு” – விரைவில் வெளியாகும் “கால்ஸ்”
Digiqole ad

Infinite Pictures நிறுவனம் தயாரித்த “கால்ஸ்” என்ற திரைப்படம் கடந்த 2019 ஜூலை மாதம் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களால் பூஜையுடன் துவங்கி தஞ்சாவூர், திருச்சி , சென்னை, வாரணாசி என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த படத்தில் VJ சித்ரா கதாநாயகியாகவும், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி , ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் ஜெ.சபரிஸ் இயக்கி, தமீம் அன்சாரி இசையமைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு (2020) ஜனவரி மாத இறுதியில் நிறைவடைந்தது . மேலும் முழுவீச்சில் Post Production பணிகள் நடந்த நிலையில், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, கொரோனா காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிக்கட்ட பணிகள், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் வேகமாக தொடங்கி 15 டிசம்பர் First look release, ஜனவரி 1 2021 Trailer ரிலீஸ் மற்றும் ஜனவரி இறுதியில் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் எதிர் பாராத விதமாக படத்தின் கதாநாயகி VJ சித்ரா காலமானார். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது, அதற்குள் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இருப்பினும் அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். அதற்காக அனைவரது ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

Digiqole ad
Spread the love

Related post