ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் !

 ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் !

அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்திய ரசிகர்கள் !

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நாயகனாக, முயற்சிக்கு முன்னுதாரணமாக வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் அவர்களின் பிறந்த நாளை 19.11.2021 முன்னிட்டு அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் மாபெரும் இரத்ததான முகாமை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று நடத்தினர்.

அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இந்நிகழ்வு நடைப்பெற்றது. இந்த இரத்த தான முகாமில் 40 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினார்கள். ரசிகர்களின் இந்த இரத்த தானம் முகாமினை கேள்விப்பட்டு நடிகர் அருண் விஜய் அவர்கள் நேரில் வந்து தானும் இரத்த தானம் செய்து சிறப்பித்தார்.

இந்த ரத்ததான முகாமினை ரசிகர்களுடன் இருந்து முதன்மை ரத்த வங்கி அதிகாரி. டாக்டர். பி. தமிழ்மணி நாராயணன், டாக்டர் உமா, செவிலியர் அமலா,லேப் டெக்னீசியன் மஞ்சுளா, ஜீனியஸ் மகேஸ்வரி, நிர்மலா தேவி, மகாலட்சுமி மற்றும் ஆயாம்மா ராஜேஸ்வரி, விக்ரம் உதவியாளர், ஓட்டுநர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்து சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.

இன்றைய இரத்த தான முகாமை தொடர்ந்து ரசிகர்கள் மேலும் ஒரு அரிய செயலை முன்னெடுத்துள்ளனர். இன்று இரத்த தானம் செய்ததோடு அல்லாமல், அவசர தேவையாக எப்போது இரத்தம் தேவைப்பட்டாலும், ரசிகர் மன்றம் மூலம், தேவைப்படுவோர்க்கு இரத்த தானம் அளிக்க முடிவு செய்துள்ளனர். ரசிர்களின் இந்த செயலுக்கும் அவர்களின் அன்புக்கும், நன்றியும், பாராட்டும் தெரிவித்தார் நடிகர் அருண் விஜய்.

Spread the love

Related post

You cannot copy content of this page