லால் சலாம் கதை என்னுடையது; படத்திற்கு வந்த புதிய பிரச்சனை!

மூன்று மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்று படத்தினை இயக்கி வருகிறார்.,
படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு வேடம் ஏற்று நடிக்கவிருக்கிறார்.,
இந்நிலையில், லால் சலாம் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் மோகன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இரண்டு நண்பர்களுக்கிடையேயான விளையாட்டு போட்டி தான் கதை மூலக்கரு என மோகன் கூறி புகார் அளித்துள்ளார்.
இதனால், ஐஸ்வர்யார் ரஜினிகாந்த் செய்வதறியாது திகைத்து வருகிறார். தயாரிப்பு நிறுவனமான லைகா இதில் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக்க முயற்சித்து வருகிறது.