வாய்தா – Movie Review

 வாய்தா – Movie Review
Digiqole ad

வாய்தா : இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில் மு ராமசாமி மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. சலவை தொழிலாளியான மு ராமசாமி அவர்களை அந்த ஊரில் உயர்ந்த சாதி இளைஞன் ஒருவரால் வண்டியில் மோதி அவருக்கு கை எலும்பு முறிந்து விடுகிறது. இதை வைத்து அவருக்கு உதவி அந்த இளைஞனின் தந்தையிடம் பணம் பறிக்க திட்டம் போடும் ஒரு நபர். முதலில் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று ஒதுங்கும் ராமசாமி பின் தனக்கு நடந்த அநீதிக்கு எதிராக போராட நினைத்து நீதி மன்றத்திற்கு செல்கிறார்.அங்கு அவருக்கு நியாயம் கிடைத்ததா இல்லையா என்பதை படத்தில் அறியலாம்.இதில் சாதியால் ஏற்படும் பிரச்சினைகளை தோலுரித்த காட்டியிருக்கிறார் இயக்குனர்.

நாசர் மற்றும் மு ராமசாமி இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.குறிப்பாக மு ராமசாமி அந்த முதியவர் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் ஆகியோர் கிராமத்து கதையில் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
இசை-லோகேஸ்வரன், ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன், படத்தொகுப்பு-நரேஷ் குணசீலன், கலை-ஜாக்கி படத்திற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து முடிந்த வரை சிறப்பாக செய்துள்ளனர்.இயக்குனர் மாகிவர்மன் இந்த நாட்டில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் சாதிய அவலங்களை தனது பாணியில் இந்த வாய்தா மூலம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். படத்தை இன்னும் சற்று சுவாரசியமாக எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வாய்தா : வாங்கலாம்

Digiqole ad
Spread the love

Related post