விஷால் நடிக்கும் “சக்ரா”. ஆன்லைன் வர்த்தகத்தில் நிகழும் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். மே 1- வெளியேடு.

 விஷால் நடிக்கும் “சக்ரா”. ஆன்லைன் வர்த்தகத்தில் நிகழும் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். மே 1- வெளியேடு.
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை ஆனந்தன் இயக்குறார். இவர்,
இயக்குனர் எழிலிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.
விஷாலிடம் கதையை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்து விட.. இப்படத்தை நானே தயாரித்து நானே நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.  கதாபாத்திரங்கள் எதுவும் மாற்ற வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். அதுமட்டுமில்லாமல், பெண் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்று குழப்பமாக இருந்தது. அதற்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஷரத்தா ஸ்ரீநாத் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம். அதேபோல் ரெஜினா கஸன்ட்ரா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும்.

விஷால், ஷரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கெஸன்ட்ரா, இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியமும், படத்தொகுப்பை சமீர் முகமதுவும் பார்த்துக் கொள்கிறார்கள். கலையை எஸ்.கண்ணன் கவனிக்க, சண்டைக்காட்சிகளை அனல் அரசு அமைத்துள்ளார்.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் நடத்தப்பட்டது.

அனைத்தையும் விரைவில் முடித்து திட்டமிட்டபடி மே 1-ஆம் தேதி ‘சக்ரா’ படம் வெளியாகும்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page