டபுள் டமாக்காவில் சமுத்திரகனியும், ஐஸ்வர்யா ராஜேஷும்

 டபுள் டமாக்காவில் சமுத்திரகனியும், ஐஸ்வர்யா ராஜேஷும்

நான் கடவுள் இல்லை, தலைக்கூத்தல், கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், மைக்கேல், பொம்மை நாயகி என பல படங்கள் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி திரையில் வெளியாகவுள்ளன.

தற்போது, S.A.சந்திரசேகரின் இயக்கத்தில், சமுத்திரக்கனி, சாக்ஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் “நான் கடவுள் இல்லை”. இயக்குனர் S.A.C -யின் 80வது படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இப்படம் இப்போது தான் திரையில் வெளியாகவுள்ளது.

மேலும், ஜெயப்ரகாஷ் இயக்கத்தில், சமுத்திரக்கனி, வசுந்தரா, கதிர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தலைக்கூத்தல்”. அப்பா-மகன் சென்டிமென்டில் உருவாகியுள்ள இப்படமும் 3ம் தேதி தான் திரையில் வெளியாகவுள்ளது. (இப்படத்தின் விமர்சனம் ஜனவரி 31ம் தேதி பதிவு செய்யப்படும்).

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. மலையாள படத்தின் ரீமேக்கான இப்படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி போனது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள “த்ரில்லர்” திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அப்படமும் வருகிற 3ம் தேதி தான் வெளியாகவுள்ளது. (இப்படத்தின் விம்சராசனம் ஜனவரி 31ம் தேதி பதிவு செய்யப்படும்).

தலா இரண்டு படங்களை ஒரே நேரத்தில் வெளியிடும் சமுத்திரக்கனி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த ஆண்டு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

Related post