ட்ராமா விமர்சனம்

 ட்ராமா விமர்சனம்

கிஷோர் குமார், சார்லி, ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ், ப்ரீத்தி ஷா பிரேம்குமார், விஜயலட்சுமி என சிலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “ட்ராமா”. சிங்கள் ஷாட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை அஜூ கிழுமலா இயக்கியுள்ளார்.

2 மணி நேரம் 13 நிமிடம் சிங்கள் ஷாட்டில் கதையமைத்து அதை படமாக்குவது என்பது சவால் தான். ஆனால், 100 நாட்களுக்கு மேல் பயிற்சி செய்து நினைத்ததை அடைந்துள்ளது படக்குழு. எனினும், சிங்கள் ஷாட் படத்திற்கு இடைவேளை தேவையா? என்ற எண்ணம். மிஸ்ட்ரி திரில்லர் புனைவு படமாக அமைந்திருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை வாசிப்போம்.

கதைப்படி,
போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் புதிதாக பணிக்கு வருகிறார் எஸ்.ஐ. ஜெய் பாலா. அன்று அவரின் காதலியான காவியா பெல்லுவுக்கு பிறந்த நாள் என்பதால் அனைவரும் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் துண்டிக்க. கான்ஸ்டபிளாக இருக்கும் சார்லி கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை செய்தது யார்? அந்த கொலையின் பின்னணி என்பதை கண்டறிய, இரண்டாம் பாதியில் களமிறங்குகிறார் கிஷோர். மர்மமான அந்த கொலையை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை…

போலீஸ் கதாபாத்திரத்தில் மிடுக்கான கதாபாத்திரமாக நடித்துள்ளார் ஜெய் பாலா. பல இடங்களில் கோபப்படும் காட்சிகளில் மிக யதார்த்தமாக நடித்துள்ளார்.

நாயகியான காவியாவுக்கு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார் இயக்குனர். ஆங்காங்கே, சரியாக நடிக்க வேண்டுமென்ற கவனத்துடன் நடித்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

சார்லி மற்றும் வின்சென்டின் நடிப்பு நம்மை படத்திற்குள்ளேயே வைத்திருக்கும். வின்சென்டுக்கு தனி பாராட்டுக்கள்.

இரண்டாம் பாதியில் வரும் கிஷோர், கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. கதைச்சுமையை அவரே தாங்கியிருந்தால் படம் கூடுதல் சிறப்பாக வந்திருக்குமோ என்று படம் பார்க்கும் அனைவர்க்கும் தோன்றும்.

நல்ல கதையை தேர்வு செய்த இயக்குனர் அஜூ, எதற்காக சிங்கள் ஷாட் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அது அவருக்கு தான் வெளிச்சம். “நீட்” பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையை இன்னும் சிறப்பான திரைக்கதையுடன் அமைத்திருந்தால் கூடுதல் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.

ஆனால், சிங்கள் ஷாட் எடுப்பதற்காக இவர் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். காலையில் நடக்கும் ஒரு கதையை அழகாக சிங்கள் ஷாட்டில் இரவு நேரத்திற்கு பயணம் செய்ய வைத்திருப்பார் அஜூ.

ஷினோஸ் ஒளிப்பதிவில் தனி அடையாளம் பதித்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும். லைட்டிங் மாற்ற தேவைப்பட்ட இடங்களில் கேமராவை ஸ்டேஷனுக்கு வெளியில் எடுத்துவந்து காட்சி படுத்தியது பாராட்டத்தக்கது. பிஜிபாலின் இசை சுமார் ராகம் தான்.

ட்ராமா – த்ரில் இல்லாத த்ரில்லர் கதை –  (2.25/5)

Related post