நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் நடிக்கும் கவின்!

 நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் நடிக்கும் கவின்!

கவின் நடிப்பில் லிஃப்ட் மற்றும் டாடா இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படத்தின் பணிகளில் தற்போது இறங்கியிருக்கிறார் கவின்.

கவினின் அடுத்த படத்தை பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் இயக்க உள்ளார். அவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.

Related post