Enna Solla Pogirai Movie Review – Fulloncinema

 Enna Solla Pogirai Movie Review – Fulloncinema

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் அஸ்வின். இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய்.

RJ ஆக பணியாற்றும் அஸ்வினுக்கு தனக்கு மனைவியாக வருபவர்களிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளது. இவருடைய அப்பா அவந்திகா மிஸ்ராவை அஸ்வினுக்காக பெண் பார்க்கிறார். அவந்திகா எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தனது கணவருக்கு ஒரு காதல் கதை இருக்க வேண்டும் என ஆசை இருக்கிறது.

இதனால் அஸ்வின் தனக்கு காதல் கதை இருப்பதாகவும் தனது காதலி தேஜ் அஸ்வினி தான் என கூறி விடுகிறார். ஒரு கட்டத்தில் அஸ்வினுக்கு தேஜ் அஸ்வினி மீதே காதல் வந்து விட அதன் பின்னர் என்னவெல்லாம் நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

நாயகனாக நடித்துள்ள அஸ்வின் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் எமோஷனல் காட்சிகளில் சில தடுமாற்றங்கள் உள்ளது.படத்தில் நாயகன் அஸ்வின் காதல் காட்சிகளில் மட்டும் நன்றாக நடிக்கிறார்,மற்றபடி ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. நாயகிகள் இருவரும் நல்ல தேர்வு, புகழின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை. படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான் என்றாலும், காதல் காட்சிகளின் பின்னணி இசையில் விவேக் மேர்வின் ஸ்கோர் செய்கிறார்கள்.

முதல் பாதி சூப்பராக இருந்தாலும் இரண்டாம் பாதி ரசிகர்களை சோதிக்கிறது. கதையிலும் பெரிய அளவில் அழுத்தம் இல்லை.

Spread the love

Related post

You cannot copy content of this page