Koorman Movie Review

 Koorman Movie Review

போலீஸ் அதிகாரியாக இருக்கும் தனா (ராஜாஜி) அப்பதவியிலி ருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அதிகாரியாக இருந்தபோது ஒருவர் மனதில் நினைப் பதை கண்டறிந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் திறமை வாய்ந்தவராக இருக்கிறார். அதன் மூலம் பல உண்மைகளை அம்பலப்படுத்துகிறார். மாணவியை கற்பழித்து ஆசிட் வீசி கொன்றவனை தனாவின் கட்டுப்பாட்டில் நரேன் விட்டுச் செல்ல அவனோ சமயம் பார்த்து தப்பிச் செல்கிறான். இந்த விஷயத்தில் உண்மையான குற்றவாளி பிரபல வக்கீலின் மகன்தான் என்பதை தனா கண்டுபிடிக்கிறார். அவனை கடத்தி வந்து உண்மையை வாக்கு மூலமாக வீடியோ பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைக்கிறார். மகனை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய தனாவை அடியாட்களை வைத்து கொல்ல முயல்கிறார் வக்கீல். இதில் தனா உயிர் தப்பினாரா? உண்மையான குற்றவாளிக்கு தண்டைனை கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கு கூர்மன் பதில் அளிக்கிறது.

மைண்ட் ரீடிங் என்ற ஒரு பயிற்சியின் மூலம் மனதில் நினைப்பதை கண்டறியும் கலையை மையாக கொண்டு இக்கதை அமைக்கப்பட்டி ருக்கிறது. வித்தியாசமான கரு என்பதால் படத்தில் சஸ்பென்சுக்கு குறைவில்லை.தனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராஜாஜி. எதிரில் இருப்பவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை கண்டறியும் சக்தி கொண்ட வராக நடித்திருக்கும் ராஜாஜிக்கு காந்தம் போல் ஈர்க்கும் பெரிய கண்கள் கூடுதல் பலம் சேர்க்கிறது.பாழடைந்திருக்கும் பண்ணை பங்களாவில் இருக்கும் ராஜாஜி அந்த பங்களாவை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்று கூறுவதற்கான காரணத்தை பிளாஷ் பேக்கில் சொல்வது அழகான காதல் காட்சியாக மின்னல் வேகத்தில் கண்முன் விரிந்து மறைகிறது.ஜனனி அயர் மீது காதல் கொள்ளும் ராஜாஜி அவருடன் வாழும் எதிர்கால வாழ்க்கையை எண்ணி திட்டங்கள் போட்டு வைத்திருப்பதும் அந்த திட்டமெல்லாம் ஜனனியின் தாய் மாமனால் சிதைந்து மண்ணோடு மண்ணாக போகும்போது கண்ணீர்விட்டு கதறி அழுது மனதை கனமாக்குகிறார் ராஜாஜி.கிளைமாக்ஸில் தன்னை தாக்க வரும் கூலிப்படையினருடன் ராஜாஜி மோதும் சண்டை காட்சி பரபரப்பு.காதலியை இழந்த துக்கத்தில் மனம்போன போக்கில் வாழும் ராஜாஜி வாழ்க்கை கானல் நீர் ஆகிப்போனதை விரத்தியில் வெளிப்படுத்துவது உருக்கம்.சஸ்பென்ஸ் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜனனி ஐயர். குறிப்பிட்ட காட்சிகளே வந்தாலும் கதையின் அடித்தளமாக அவரது பாத்திரம் அமைந்திருக்கிறது.பாலசரவணன் லேசான நரை முடியுடன் பெரிய மனித தோரணையில் பேசி நடித்திருப்பது ரசிக்கலாம்.ஆடுகளம் நரேன் வழக்கம்போல் போலீஸ் அதிகாரியாக வந்தாலும் நடிப்பில் மாறுபாடு காட்டி கதைக்கு துணை நிற்கிறார்.எம் கே தயாரித்திருக்கும் இப்படத்தை பிரைன் பி ஜார்ஜ் இயக்கியிருக்கிறார். மைண்ட் ரீடிங் விஷயத்தை மையமாக கொண்டு சைக்காலஜிகல் த்ரில்லாராக  திருப்பங்களுடன்  படத்தை இயக்கி இருக்கிறார்.காதல் எபிசோடுக்கும், ஆக்‌ஷன் எபிசோடுக்கும் கலர் டோனில் மாறுபாடு காட்டி இருக்கி றார் ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த்.டோனி பிரிட்டோ இசையில் ஆம்பல் பூ பாடல் கதையோட்டத்தின் நீரோட்டமாய் சலசலக்கிறது.

Koorman : வித்தியாச முயற்சி 

Related post