வெற்றிநடைப்போடும் ‘4 Sorry’. திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

 வெற்றிநடைப்போடும் ‘4 Sorry’. திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கடந்த வெள்ளி அன்று 4 Sorry படம் வெளியானது. படத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் படம் குறித்து இயக்குநர் சக்திவேல் கூறுகையில்,

ஜான் விஜய், காளி வெங்கட், டேனியல், ரித்திகா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நான்கு வித்தியாசமான கதைகள். வாழ்க்கையில் தவறு செய்யும்போது அதை உணர்ந்து எப்படி சாரி கேட்கிறோம் என்பதுதான் படத்தின் அடிநாதம்.

டேனியல் நடித்த முதல் கதையில் தேவையில்லாத விஷயத்தில் சிக்கிக்கொள்ளும்போது அதனால் ஏற்படும் நிகழ்வுகளை முழுக்க முழுக்க காமெடியாகவும், சாக்ஷி அகர்வால், கார்த்திக் நடித்துள்ள கதையில் நிச்சயதார்த்தம் அன்று அவர்களிடையே ஒரு பிரச்சனை முளைக்கிறது. அதை அவர்கள் எப்படி மேற்கொள்கிறார்கள் என்பதை கிராண்டியர் மேக்கிங்கிலும், காளிவெங்கட், ரித்விகா நடித்த மூன்றாவது கதையில் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தும் அவர்களுக்கு அச்சுறுத்தறுத்தலாக இருக்கும் மனிதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும், ஜான்விஜய் சஹானா நடித்துள்ள நான்காவது கதையில் ‘எங்கேயும் எப்போதும்’ போல் சுவாரஸ்யமான பஸ் பயண கதையையும் சொல்லியுள்ளோம். இந்த வித்தியாசமான கதைக்களத்துக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும். மீண்டும் உங்களை ஒரு புதிய முயற்சியில் சந்திக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

நடிகர்-நடிகைகள்:

ஜான் விஜய்

காளி வெங்கட்

சாக்ஷி வெங்கட்

ரித்விகா

டேனி ஆனி போப்

சஹானா ஷெட்டி

கார்த்திக் அசோகன்

சார்பட்டா முத்துக்குமார்

மனோகர்

தொழில்நுட்ப கலைஞர்கள்:

இயக்கம்: சக்திவேல்

ஒளிப்பதிவு: வெங்கடேஷ் பிரசாத்

இசை: பிரசன்னா சிவராமன்

எடிட்டிங்: பி.கே

கலை: ஞானம்

சண்டை: சுகன்

DI: சாரா ஸ்டூடியோஸ்

ஆடியோகிராஃபி: பால்

சவுண்ட் மிக்ஸிங்: சரவணன்

காஸ்டியூம்: அபிராமி, தெய்வ ஜெகன்
மேக்கப்:தாஸ்

VFX: வினோலி

ஸ்டில்ஸ்: R.S.ராஜா

மேனேஜர்:பரத்

நிர்வாக தயாரிப்பாளர்: வ்இ.பிரசாத்

இணை தயாரிப்பு: சிவகுமார்

புரொடக்ஷன் ஸ்டூடியோ:சேப்டி ட்ரீம்

தயாரிப்பு: செந்தில் பிரபு, சக்திவேல், ஜெகநாரயணன், கார்த்திக் அசோகன் தயாரித்துள்ளனர்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

Related post