400 கோடி பட்ஜெட்; தமிழ் சினிமாவை அதிர வைக்கப் போகும் “தளபதி 68”!

 400 கோடி பட்ஜெட்; தமிழ் சினிமாவை அதிர வைக்கப் போகும் “தளபதி 68”!

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், தனது அடுத்தபடமான 67வது படத்திற்கும் பூஜை போட்டு, அப்படத்திற்கான வேலைகளில் இருந்து வருகிறார் விஜய். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். வாரிசு ரிலீஸ் ஆனதும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து, தளபதி விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் 150 கோடி என்று வைத்துக்கொண்டு 250 கோடியை படத்தினை உருவாக்கும் செலவிற்கு பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம்..

 

Related post