60 லட்சம் பார்வைகளை கடந்த அப்பத்தா… வடிவேலு ராக்ஸ்!!

 60 லட்சம் பார்வைகளை கடந்த அப்பத்தா… வடிவேலு ராக்ஸ்!!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ரீ எண்ட்ரீ கொடுக்கப்போகும் படம் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

இப்படத்தை லைகா நிறுவம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

படத்தின் அப்பத்தா எனத் தொடங்கும் பாடல் ஒன்று திங்கட்கிழமை யூ டியூப் தளத்தில் வெளியானது.இப்பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிந்தார்.

இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, இதுவரை யூ டியூப் தளத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

இதனால், இப்படத்திற்கு பெரும் வரவேற்பு நிலவி வருகிறது.

 

Related post