கீர்த்தி சுரேஷ்  “பூமித்ரா” என்ற புதிய நிறுவனத்தை  துவங்கியுள்ளார்.

 கீர்த்தி சுரேஷ்  “பூமித்ரா” என்ற புதிய நிறுவனத்தை  துவங்கியுள்ளார்.
Digiqole ad

கீர்த்தி சுரேஷ் தனது புது நிறுவனம் குறித்து ரசிகர்களுக்கு சமீபமாக  பல யூகங்களை அறிவித்து வந்திருந்தார்.

இன்று, நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில்முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன்  இணைந்து,   சுத்தமான மற்றும் இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் பூமித்ரா என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முயற்சியானது சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோருக்கு ஒரு தனித்துவமான பிராண்டா இருக்கும், மேலும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதன் பல நன்மைகளைப் ஊக்குவிப்பதாக, இயற்கை சார்ந்த  வாழ்க்கைக்கான நுகர்வோரின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்குவதை  நோக்கமாக  கொண்டுள்ளது இந்நிறுவனம்.

 பூமித்ரா சரும தயாரிப்புகள் , ஒவ்வொரு நவீன சருமத்திற்கும் ஏற்ற சரும பராமரிப்பு பொருட்களை, நம் பண்டைய கால அழகு பராமரிப்பை தழுவி,  நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்குகிறது. தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒவ்வொருவரின் தோல் மற்றும் கூந்தலுக்கும் பொருந்தும் வகையில் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சரும தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள்  முழுமையான ஆய்வுக்குப் பிறகு, மிகுந்த கவனத்துடன்  கலவை செய்யப்படுகிறது.

பூமித்ராவின் தயாரிப்புகள் சுத்தமானவை, பாதுகாப்பானவை, சைவ பொருட்கள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுபவை. மேலும் இத்தயாரிப்ப்புகள் சுற்றுசூழல் சுழற்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுபவை.

தனது இந்த புதிய பயனத்தை பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது…
ஒரு குழந்தையாக, என் பாட்டி முதலான பெண்கள் அவர்களின் அழகை பராமரிக்க  இயற்கை பொருட்களை நம்பியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன், அது இன்றுவரை என் மனதில் பசுமையாக இருக்கிறது. பண்டைய இயற்கை பொருட்களின் செயல்திறன் எனது தோலுக்கு முழுமையான மற்றும் நீடித்த நன்மைகளை மட்டுமே வழங்கியது. பூமித்ரா மூலம், இயற்கையான தோல் பராமரிப்பின் இந்த நன்மையை அனைவருக்கும் அளிக்க  விரும்புகிறேன். இதன் மூலம் ஒவ்வொரு தோல் வகைக்கும் தனித்த்னமை மிக்க தயாரிப்புகள் கொண்டு அழகை பராமரிக்கலாம்.

இன்று வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் சுகாதாரம் பற்றிய விழிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் தோல் பராமரிப்பில் தேர்வுகள் செய்யும் போது சுற்றுசூழல்  நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். பூமித்ரா அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு சரியான தோல் பராமரிப்பு  தீர்வுகளை வழங்கும், அதே நேரத்தில் பெரிய எண்ணிக்கையிலான  மக்களிடையே இயற்கை பொருட்களின் பயன்பாட்டை பரிந்துரைக்கும் புதிய தயாரிப்பாகவும் இது இருக்கும்

கீர்த்தி சுரேஷ் பூமித்ரா தயாரிப்புகள் குறித்து  கூறியதாவது. “இயற்கையானது, நிலையானது  மற்றும் சிறப்பான பயனை தருவது” என்றார்.

Please use the below link to download the high resolution images 

Digiqole ad
Spread the love

Related post