படம் முடிந்த பிறகு இயக்குனரையே தூக்கிய தயாரிப்பாளர்… நியாயம் கேட்கும் இயக்குனர் ஆதிரை!

 படம் முடிந்த பிறகு இயக்குனரையே தூக்கிய தயாரிப்பாளர்… நியாயம் கேட்கும் இயக்குனர் ஆதிரை!

“பீச்சாங்கை” கார்த்திக் மற்றும் நாயகியாக மணிஷாஜித் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஆர்யமாலா”. இப்படத்தினை ஜேம்ஸ்யுவன் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறும் என அறிவித்திருந்தது படக்குழு.

இந்நிலையில், ஆர்யமாலா படத்தின் உண்மையான இயக்குனர் நான் தான் என்றும், தயாரிப்பாளரோடு ஏற்பட்ட மனக்கசப்பில், தயாரிப்பாளரே தான்தான் இப்படத்தின் இயக்குனர் என்றும், ஆண்டாள் என்று பெயரிடப்பட்ட படத்திற்கு ஆர்யமாலா என்று பெயரிட்டிருக்கிறார்கள் என்றும் புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார் இயக்குனர் ஆதிரை.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது, “
தோழமை உறவுகளுக்கும், ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்
கடந்த 2017ல் “ஆண்டாள்”என்கிறப் பெயரில்…

திரைப்பட நடிகர் “பீச்சாங்கை” கார்த்திக், நடிகை மணிஷாஜித் ஆகியோரை நாயகன், நாயகியாக கொண்டும் மதிப்பிற்குரிய இயக்குனர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், உஷாஎலிசபெத், தவசி உள்ளிட்ட நடிகர், நடிகைகளை முக்கிய கதாபாத்திரங்களாகவும் ஒளிப்பதிவாளர் ஜெய், இசையமைப்பாளர் செல்வநம்பி, படத்தொகுப்பாளர் “சகா”ஹரிஹரன், கலை இயக்குனர் சிவா, நடன இயக்குனர் தஸ்த்தா, சண்டை மிரட்டல் செல்வா – வீரா, தயாரிப்பு மேலாளர் ஹென்றிகுமார், மக்கள் தொடர்பு ஷேக் ஆகியோர் அடங்கிய படக்குழுவை வைத்து பெஃப்சி அமைப்பின் அனுமதியோடு தமிழ் திரைப்படத்தை இயக்கி முடித்தேன்.

அப்படம் தற்சமயம் “ஆர்யமாலா” என்கிற பெயர் மாற்றம் செய்யப்பட்டு தாயாரிப்பாளரே இயக்குனர் எனும் பதிவோடு இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானதை கண்டு வேதனை அடைந்தேன்.

ஊடக நண்பர்களும்,முகநூல் உறவுகளும்,எழுத்தாளர்களும்,கவிஞர்களும்,சமூக செயற்பாட்டளர்களும் ஒரு படைப்பாளியாக எனது உரிமையை பாதுகாக்க துணை நிற்குமாறு அன்போடு வேண்டுகிறேன்!”. என்று கூறியுள்ளார்.

இப்பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரு படத்தினை இயக்கிய இயக்குனரை தூக்கிவிட்டு தான்தான் இப்படத்தின் படைப்பாளி என்று அறிவித்த ஜேம்ஸ் யுவன் மீது தமிழ் சினிமா சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

Related post