ஆற்றல் விமர்சனம்

 ஆற்றல் விமர்சனம்

ஜெ.மைகில் தயாரிப்பில், விதார்த், ஸ்ரீதா ராவ், சார்லி, வம்சி கிருஷ்ணா நடிப்பில், கே.எல்.கண்ணன் இயக்கியிருக்கும் படம் “ஆற்றல்”.

கதைப்படி,
அப்பாவின் பழைய காரை, தானியங்கி காராக மாற்ற நினைக்கிறார் ஹீரோ(விதார்த்). அதற்கு போதிய பணம் இல்லாமல் இருக்க அந்த ப்ராஜெக்ட் அப்படியே நின்று போகிறது. திடீரென அப்பா (சார்லி) சாலை விபத்தில் இறந்து போகிறார். அதன் பின், அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென தானியங்கி காரை உருவாக்குகிறார்.

ஒரு நாள் பைனான்சியர் ஒருவர் விதார்த்தை அழைத்து உன்னுடைய ப்ராஜெக்ட்டுக்காக. உன் அப்பா 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதை கேட்கத்தான் இப்போது உன்னை அழைத்தேன் என்கிறார்.

அந்த பைனான்சியரிடம் பேசிவிட்டு வரும் போது, பைக்கில் வரும் ஒரு கும்பல். ஒருவரை அடித்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை எடுத்துச் செல்கின்றனர். அப்போது, தான் சார்லிக்கும் இப்படி நடந்திருக்கும் என்பதை உணர்ந்து வில்லனை தேட ஆரம்பிக்கிறார்.

வில்லன் வம்சி எப்படி கொள்ளை அடிக்கிறார்? வம்சியை விதார்த் எப்படி கண்டு பிடிக்கிறார்? வம்சியை என்ன செய்தார்? அப்பாவின் கடனை அடைத்தாரா? என்பது மீதிக்கதை…

விதார்த் நடிப்பில் சற்று தேர்ச்சி அடைந்துள்ளார் என்றே சொல்லலாம். வழக்கமாக தாடி மீசையுடன் நடிக்கும் இவர். இப்படத்தில் வேறொரு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அது அவருக்கு பொருத்தமாகவும் உள்ளது.

ஹீரோயின் ஸ்ரீதா ராவ், அப்பா கதாபாத்திரத்தில் சார்லி, நண்பனாக VJ விக்னேஷ்காந்த் என உடன் நடித்த அனைவரும் அளவாக நடித்துள்ளனர்.

கே.எல்.கண்ணன் கதையில் புதுமையை முயற்சித்துள்ளார் வாழ்த்துக்கள். ஆனால், திரைக்கதையில் அதிகப்படியான கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தொய்வான திரைக்கதை படத்தின் ஆற்றலை குறைத்துவிட்டது.

அஸ்வின் ஹேமந்த் இசை படத்திற்கு ஆங்காங்கே மெருகேற்றியது. கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

ஆற்றல் – தடுமாற்றம் – (2/5)

Related post