படப்பிடிப்பில் விபத்து; பலத்த காயமடைந்த அமிதாப்பச்சன்!

 படப்பிடிப்பில் விபத்து; பலத்த காயமடைந்த அமிதாப்பச்சன்!

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் படம்தான் “ப்ராஜெக்ட் கே”.

இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அமிதாப் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சியின் போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அமிதாப்பச்சனின் வலது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது.

இதனால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்ததும் மும்பைக்குச் சென்ற அமிதாப் பச்சன் தனது வீட்டில் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

 

Related post