படப்பிடிப்பில் காயம்; புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்!

அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்து வரும் படம் அச்சம் என்பது இல்லையே. இப்படத்தை விஜய் இயக்கி வருகிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடித்தபோது, அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இது போன்ற பல காயங்கள் எனக்கு ஏற்கனவே இருந்துள்ளன. ஆனாலும் டூப் இல்லாமல் நடிப்பதையே நான் விரும்புகிறேன்.. உங்கள் அன்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் அருண் விஜய்.
இதுதான் நடிகரின் வாழ்க்கை. யாராலும் தடுக்க முடியாது என ஹேஷ் டேக் போட்டு பதிவிட்டுள்ளார்.