அருண்விஜய்க்கு காயம்.. கேரளாவில் சிகிச்சை

 அருண்விஜய்க்கு காயம்.. கேரளாவில் சிகிச்சை

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் அச்சம் என்பது இல்லையே.

இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எமி ஜாக்சன் இப்படத்தில் நடித்து வருகிறது.

படத்தின் சண்டைக் காட்சிகளில் எதிர்பாராதவிதமாக அருண்விஜய்யின் காலில் தசைநார் கிழிந்துவிட்டது.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியபோது, வலியை தாங்கிக் கொண்டு படப்பிடிப்பினை முடித்துக் கொடுத்து விட்டு கேரளா சென்றார்.

அங்கு ஆயூர்வேத முறையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது கால் மூட்டில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறேன். தற்போது முன்பை இருந்ததை விட நன்றாகவே இருப்பதாக உணர்கிறேன். விரைவில் படப்பிடிப்புக்கு திரும்புவேன்.” என்று கூறியுள்ளார்.

 

Related post