முழுக்க முழுக்க கிராமத்து கதையில் முத்தையா இயக்கத்தில் ஆர்யா.?

 முழுக்க முழுக்க கிராமத்து கதையில் முத்தையா இயக்கத்தில் ஆர்யா.?

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவாகி இருக்கும் படம் தான் “விருமன்”. கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தியோடு கைகோர்த்திருக்கிறார் இயக்குனர் முத்தையா. இப்படத்தினை 2டி நிறுவனமே தயாரித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து முத்தையா தனது அடுத்த படத்தில் ஆர்யாவை நாயகனாக நடிக்க வைக்க இருக்கிறாராம். தனது வழக்கமான கதையை போல இப்படத்தையும் கிராம பின்னனி கொண்ட படமாக இயக்கவிருக்கிறாராம் முத்தையா.

இதற்கு முன் ஆர்யா கிராம பின்னணி கொண்ட படத்தில் நடித்தாலும், இப்படம் அதில் மிகவும் மாறுபட்ட படமாக இருக்குமாம். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

Related post