“ஏன் கனவே” ஆல்பம் பாடலை வெளியிட்ட நடிகர் ஆர்யா

 “ஏன் கனவே” ஆல்பம் பாடலை வெளியிட்ட நடிகர் ஆர்யா
Digiqole ad

“ஏன் கனவே” ஆல்பம் பாடலை வெளியிட்ட நடிகர் ஆர்யா மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி !

கிங்ஸ் பிக்சர்ஸ் வழங்க திரு.கௌரிசங்கர் தயாரிப்பில் நடிகர் சந்தோஷ் பிரதாப் , சவதிஸ்டா நடித்துள்ள “ஏன் கனவே” ஆல்பம் பாடலை
நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் இன்று 14.10.2021 காலை வெளியிட்டனர்.

“சார்பட்டா” படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் “சந்தோஷ் பிரதாப்” இவர் தமிழில் மேலும் பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இவர் “ஏன் கனவே” என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த ஆல்பம் முழுக்க முழுக்க உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்யும், புது மண தம்பதிகளுக்கு இடையே நடக்கும் சில சொல்லப்படாத பிரச்சனைகளை, எடுத்துச் சொல்லும் வகையில் மிக உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ் பிக்சர்ஸ் சார்பில் திரு.கௌரிசங்கர் தயாரித்துள்ள இப்பாடலை, பாடலாசிரியர் “முத்தமிழ்” பாடல் எழுத, ஒளிப்பதிவு “சுந்தர்” கவனிக்க , “யாஞ்சி யாஞ்சி”, “ராசாளியே” “ஆளப்போறான்  தமிழன் ” போன்ற பாடல்களைப் பாடிய “சத்யபிரகாஷ்” இந்த பாடலை பாடியுள்ளார். எடிட்டிங் “ரெஜிஷ்” செய்ய இந்த ஆல்பத்திற்கு இசையமைக்கிறார் “ராகேஷ் அம்பிகாபதி”. இளையதளபதி விஜய் நடித்த ‘ஜில்லா, புலி’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய டி.ஆர்.பாலா இந்த ஆல்பத்தை இயக்கியிருக்கிறார். இவர் 50க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆல்பம் பாடலை, ஆயுத பூஜை தினத்தின் சிறப்பு வெளியீடாக நடிகர் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் வெளியிட்டனர்.

திரு.கௌரிசங்கர் தனது நிறுவனமான கிங் பிச்சர்ஸ் மூலமாக, அடுத்தடுத்து ஆல்பம் பாடல்கள், வெப்சீரிஸ்  மற்றும் குறும்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

Digiqole ad
Spread the love

Related post