சர்தார் படத்தில் கார்த்திக்கு இத்தனை வேடங்களா?

 சர்தார் படத்தில் கார்த்திக்கு இத்தனை வேடங்களா?

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவனாக நடித்துள்ளார் நடிகர் கார்த்தி. விமர்சன ரீதியாக பலரும் கார்த்தியின் நடிப்பை பார்ட்டி தீர்த்தனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் கார்த்தி நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகவுள்ள “சர்தார்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி அதீத வரவேற்ப்பை பெற்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். தேசிய விருது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கார்த்தி, ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கார்த்தி “டபுள் ஆக்ஷன்” கதாபாத்திரமாக நடித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில். டீசரில் மொத்தம் 6 வேடங்களிட்டு ஸ்பையாக நடித்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், தீபாவளி தினத்தன்று கார்த்தியின் “சர்தார்” திரைப்படத்துடன், சிவா கார்த்திகேயனின் “பிரின்ஸ்” மற்றும் ஜெயம் ரவியின் “அகிலன்” ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தளிக்க திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டீசர் லிங்க்

Related post