அசர வைத்த கார்த்தி… டீசர் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சர்தார்!

 அசர வைத்த கார்த்தி… டீசர் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சர்தார்!

இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் ”சர்தார்”.

இரும்புத்திரை, ஹீரோ என இரு மாபெரும் படங்களை இயக்கி முடித்ததும் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் மித்ரன்.

பல விதமான கெட் அப்-பில் நடித்து அசத்தியிருக்கிறார் கார்த்தி. படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை யூ டியூப் தளத்தில் சுமார் 4.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி வி பிரகாஷ்குமார். வரும் தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வர இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கார்த்தியின் நடிப்பில் பொன்னியின் செல்வன் நல்லதொரு வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழத் துவங்கியிருக்கிறது.

 

Related post