ரசிகர் மரணம்; அஞ்சலி செலுத்திய கார்த்தி!

 ரசிகர் மரணம்; அஞ்சலி செலுத்திய கார்த்தி!

சென்னையில் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் தெரிவித்துள்ளது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளராக இருந்த 29 வயதான வினோத் என்ற ரசிகர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனால் மனமுடைந்த நடிகர் கார்த்தி, திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று வினோத்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிறிது நேரம் அங்கு இருந்து வினோத்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

 

Related post