ஸ்டைலிஷ் ஹீரோ ரஹ்மான் மகள் கல்யாணம்
மலையாளம் – தமிழ் – தெலுங்கு – இந்தி மொழிகளில் பிரபலமான நடிகர் ரஹ்மான் – மெஹர் இவர்களின் முதல் மகள் ருஷ்டா ரஹ்மான் – அல்தாப் நவாப் திருமணம் சென்னையில் நடந்தது. இத்திருமணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அவருடன் மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் மணமக்களை வாழ்த்தினார்.
இசைபுயல் A.R.ரஹ்மான், மனைவி சைர பானு ரஹ்மான், மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். நடிகர் ரஹ்மான் மனைவின் சகோதரி கணவர் தான் AR.ரஹ்மான்.
மேலும் ரஹ்மான் நடித்த முதல் படமான சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம் ‘கூடெவிடே’ படத்தின் தயாரிப்பாளர் பிரேம் பிரகாஷ் கலந்து கொண்டார். மற்றும் நடிகர் மோகன்லால் , மனைவி சுசித்ரா மோகன்லால் , சரத்குமார், ராதிகா சரத்குமார் நடிகர் விக்ரம் , இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் , இயக்குனர் மணிரத்னம் , சுஹாசினி மணிரத்னம் , சுந்தர் சி , நடிகர் பானு சந்தர், நடிகைகள் அம்பிகா , சொப்னா , மேனகா சுரேஷ் , லிசி , பார்வதி ஜெயராம் , ஷோபனா , பூனம் தில்லான் , நதியா , சுவேதா மேனன், தயாரிப்பாளர் G.k.ரெட்டி, நடிகர் பாக்யராஜ் – பூர்ணிமா பாக்யராஜ் , வினித் , காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். அனைவரையும் ரஹ்மான் மானேஜர் C.K . அஜய்குமார் வரவேற்றார்.