ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களின் பட்டியலில் சூர்யா.. கொண்டாடும் ரசிகர்கள்!!

 ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களின் பட்டியலில் சூர்யா.. கொண்டாடும் ரசிகர்கள்!!

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இதில் நடிகர் சூர்யாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலக புகழ்பெற்ற ஒன்று. பலகாலமாக இந்த விருதை பெற இந்திய சினிமா முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரை போற்று ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்தது, பின்னர் இப்படம் வெளியேறியது..

இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதனை சமூக வலைதளங்களில் சூர்யாவின் ரசிகர்கள் பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.

 

Related post