மீண்டும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் சூர்யா.? இயக்குனர் யார் தெரியுமா.??

 மீண்டும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் சூர்யா.? இயக்குனர் யார் தெரியுமா.??

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது சூர்யாவின் 41வது திரைப்படம். இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து அடுத்த படத்தின் இயக்குனரையும் சூர்யா தேர்வு செய்திருக்கிறார்.

நேற்று இன்று நாளை, சிவகார்த்திகேயனின் அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் தான் சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.

இப்படம் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறதாம். சூர்யா இதற்கு முன் 24, ஏழாம் அறிவு போன்ற சயின்ஸ் பிக்சன் படங்களில் நடித்திருந்தாலும், ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகும் இப்படம் சற்று மாறுபட்டுதான் இருக்குமாம். அடுத்தடுத்த படங்களை முடித்து ரவிக்குமாரோடு கைகோர்க்கவிருக்கிறாராம் சூர்யா.

Related post