ஆரம்பிக்கப்படாத வாடிவாசல்; சூர்யாவின் அடுத்த ப்ளான்… உற்சாகத்தில் ரசிகர்கள்!!
சுர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தினை முடித்ததும் உடனடியாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சூர்யா.
ஆனால், வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் விடுதலை படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், வாடிவாசல் படத்தின் பணிகள் துவங்கப்பட இன்னும் காலதாமதமாகுமாம்.
ஆகவே, இந்த இடைவெளியில் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்து விட நடிகர் சூர்யா திட்டமிட்டிருக்கிறாராம்… அதற்கான பணிகளும் துவங்கப்பட்டுவிட்ட்டதாம்.
ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் சூர்யாவின் சினிமா வாழ்வில் ஒரு முக்கியமான் திருப்புமுனையாக அமைந்ததால், அடுத்தபடமும் மிகவும் அதிகமாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.