வடிவேலுக்கு டாக்டர் பட்டம்

 வடிவேலுக்கு டாக்டர் பட்டம்

தமிழ் சினிமாவில் காமெடிக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு.

சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்.

இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் செயல்பட்டு வரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வைகைப்புயல் வடிவேலுவுக்கு சிறந்த பொழுதுபோக்கு கலைஞருக்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து, தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக வடிவேலுவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

 

Related post