நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை!

 நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை!

பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதன் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடிய கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.

இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார். மேலும் ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார். படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படம் மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

நடிகர்கள்: கயல் ஆனந்தி, ஆர்.கே சுரேஷ், விஜித், ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு விவரம்:
இயக்குநர்: ராஜசேகர்,
தயாரிப்பாளர்: ரஞ்சனி,
தயாரிப்பு: பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ்,
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து,
ஒளிப்பதிவு: இளையராஜா,
இசை: சுதர்ஷன்,
ஒரு பாடல்: ஜோகன் செவனேஷ்,
கலை: டி.என். கபிலன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா.

Related post