அடுத்தடுத்து மூன்று படங்கள்.. விக்ரம் ரசிகர்களுக்கு விருந்து!

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாராகி விட்டதால் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க சில வருடங்களுக்கு முன் உருவான திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.
படத்தின் அனைத்து வேலைப்பாடுகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி நிற்கிறது. சில பல பிரச்சனைகள் காரணமாக ரிலீஸாகாமல் இருந்த இந்த படம் திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளை துவங்கி இருக்கிறார்கள் படக்குழுவினர்.
இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன். முதல் பாகத்திலும் மிகவும் வலுவான பாத்திரம் விக்ரமுக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த பாகத்திலும் அந்த கதாபாத்திரம் தொடர்ச்சியாகும் என்பதால் இப்படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். விரைவில், இதுவும் ரிலீஸாகும் என்பதால் தொடர்ச்சியாக மூன்று படங்கள் வரிசையில் நிற்கிறது.
அடுத்ததாக லியோ படத்தினை முடித்ததும் லொகேஷ் கனகராஜ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.