மீண்டும் கத்தி, அரிவாளோடு விஷால் – ஹரி கூட்டணி!

 மீண்டும் கத்தி, அரிவாளோடு விஷால் – ஹரி கூட்டணி!

விஷால் நடிக்கும் 34வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படத்தின் பூஜையும் நேற்று நடைபெற்று படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது. இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

தாமிரபரணி மற்றும் பூஜை இந்த இரு படங்களில் இணைந்த விஷால் – ஹரி கூட்டணி மூன்றாவது படத்திற்காக இணைந்துள்ளது.

வெளியிட்டுள்ள டைட்டில் போஸ்டரில் கத்தி, அரிவாள், துப்பாக்கி, கைவிலங்கு என ஹரி இயக்கத்திற்கான மொத்த அடையாளங்களும் அந்த போஸ்டரில் உள்ளது.மேலும், மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப்பும் அதில் இடம் பெற்றுள்ளது.

படத்தின் இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Related post