நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

 நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் புறா எச்சத்தால் ஏற்படக்கூடிய ஒருவித தொற்றால் நுரையீரல்கள் செயலிழக்க கூடிய நிலைக்கு ஆளாகி சிகிச்சைப்பெற்று வந்தார்.

நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து கொரோனாவாலும் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், நுரையீரலை மாற்றும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் மாற்று நுரையீரலுக்காக காத்திருந்த நிலையில் நேற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரது இழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், மீனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது இரங்கலைத் தெரிவித்தார்..

 

Related post