கார் விபத்தில் சிக்கினார் நடிகை ரம்பா..

 கார் விபத்தில் சிக்கினார் நடிகை ரம்பா..

நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளோடு கனடா நாட்டில் வாழ்ந்து வருகிறார்.

தற்போது, நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது ரம்பா அவரது குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார் காரில் இருந்துள்ளனர். ரம்பாவின் இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ரம்பாவுக்கு பெரிதான காயம் ஏற்படவில்லை. விபத்தில் கார் பழுதடைந்தது.

கார் விபத்து குறித்த செய்தியை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். அதில், “குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது, ​​எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது. என்னுடன் என் குழந்தைகளும் காரில் இருந்தனர். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு சிறு காயங்கள் உள்ளன. ஆனால் எனது பெண் குழந்தை சாஷா இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறார். எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.” என்று கூறியிருக்கிறார் ரம்பா.

இந்த கோரிக்கையுடன் காரின் புகைப்படங்களை பகிர்ந்ததோடு, மருத்துவமனை அறையில் இருந்து தனது மகளின் புகைப்படத்தையும் ரம்பா பகிர்ந்துள்ளார்.

Related post