சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்!

 சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்!

இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் மாவீரன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டீசராக வெளியிட்டு அசத்தினர் படக்குழுவினர்.

இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். மேலும், மூத்த நடிகரான கவுண்டமணி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதீதி ஷங்கர் நடிக்கவிருக்கிறார்.

இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் விருமன் பட ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related post