வெற்றிமாறன் திரைப்பட கல்லூரியில் சேர்க்கை ஆரம்பம்..

 வெற்றிமாறன் திரைப்பட கல்லூரியில் சேர்க்கை ஆரம்பம்..

இயக்குநர் வெற்றிமாறன் சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனத்தை (IIFC -International Institute of Film and Culture) கடந்த வருடம் தொடங்கினார்.

தமிழ் நாட்டிலிருந்து ஒரு மாவட்டத்திற்கு ஒன்று என்கிற கணக்கில், தமிழ் பேசும் 21 – 25 வயத்துக்கு உட்பட்ட, ஊடகமல்லாத ஏதேனும் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள், இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு முன்னுரிமை தகுதி வழங்கப்படும்..

குறிப்பாக சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், ஒரு குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகியோருக்கு இதில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இவர்களுக்கு ஆரம்ப ஆய்வு, எழுதப்பட்ட சோதனை, கல்வி நேர்காணல், தொழில்முறை நேர்காணல் மற்றும் வீட்டு வருகை என ஐந்து படிகளாக தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, அவர்களது பயிற்சி காலத்தில் 100% மானியங்களுடன் முழுமையான உணவு மற்றும் ,குடியிருப்பு வசதிகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இன்ஸ்டிட்யூட்டின் 2-வது பேட்சுக்கான (2023) மாணவர் சேர்க்கை தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://iifcinstitute.com/admission/ என்கிற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Spread the love

Related post

You cannot copy content of this page