விடுதலை படத்தைத் தொடர்ந்து மீண்டும் நாயகனாக சூரி!

 விடுதலை படத்தைத் தொடர்ந்து மீண்டும் நாயகனாக சூரி!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க உருவாகி வரும் படம் தான் விடுதலை. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சூரி நடிக்க, விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படம் தான் சூரி நாயகனாக நடிக்கும் முதல் படம். தற்போது இரண்டாவது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சூரி.

மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் இயக்கத்தில் இணையவுள்ளார் சூரி.

ஆனால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள நிலையில், விரைவில் இந்தப் படம் மற்றும் இதன் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுது.

Related post