ஆஸ்கர் வென்ற படத்தின் யானைக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி!

 ஆஸ்கர் வென்ற படத்தின் யானைக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி!

2023ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விழாவில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட “ தி எலிபாண்ட் விஸ்பரஸ்” என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய ஆவணப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

இரண்டு யானைகளை தங்களின் குழந்தைகள் போல் வளர்த்து வந்த பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து தான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இந்த ஆவணப்படுத்தில் இடம் பெற்றிருந்த ரகு என்ற யானை தாய் யானையை பிரிந்து நாய்களிடம் கடிபட்டு ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது.

இந்த யானையைக் காப்பாற்ற வேண்டும் என்றால் விலையுயர்ந்த மருந்துகள் வாங்க வேண்டும் என்பதற்காக காப்பகத்தில் இருக்கும் அதிகாரி ஒருவர் சிவகார்த்திகேயனிடம் பண உதவி கேட்க, அவரும் உடனே அதை செய்துள்ளார்.

தற்போது அந்த யானை உயிருடன் இருப்பதற்கு காரணமே சிவகார்த்திகேயன் அச்சமயத்தில் செய்த உதவியினால் மட்டுமே என்கிறார் அந்த அதிகாரி.

 

Related post